News

43 நாள் அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது; மசோதாவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

 

அமெரிக்க அரசு கட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் அளும்கட்சி அந்த ஆண்டுகான நிதி செலவின திட்டத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி பெறாவிட்டால் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் முதல் கான்டிராக்ட்-க்கான நிதி ஒதுக்கீடு, அரசு சேவைகள் வரையில் அனைத்தும் பாதிக்கும்.

இப்படி இந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, டிரம்ப் அரசு சுதாகார திட்டத்திற்கான மானியத்தை தொடர முடியாது என அறிவித்த காரணத்தால் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினர் எதிர்த்தனர். இதனால் மொத்த செலவின மசோதாவும் ஒப்புதல் பெற முடியாமல் அமெரிக்க அரசு முடக்கத்தை எதிர்கொண்டது.

நிதி முடக்கம் ஏற்பட்டதால், பல துறைகள், சேவைகள் முடங்கின. பல அரசு ஊழியர்கள் சம்பளமில்லாமல் விடுமுறையில் அனுப்பப்பட்டனர். நிதி இல்லாததுடன், ஊழியர் பற்றாக்குறையும் சேர்ந்ததால் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், தங்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், ஜனநாயக கட்சியினரின் சிலர் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மசோதா செனட் சபையில் நிறைவேறியுள்ளது. அடுத்ததாக, பிரதிநிதிகள் சபையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து 43 நாட்களுக்கு அரசு நிர்வாகம் முடக்கம் முடிவுக்கு வந்தது. மசோதாவில் கையெழுத்திட்ட பிறகு டிரம்ப் கூறியதாவது: சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைப் பறிக்கும் முயற்சியில், உள்ள ஜனநாயகக் கட்சியினர் கடந்த 43 நாட்களாக, அமெரிக்க அரசாங்கத்தை முடக்கினர். இன்று, மிரட்டி பணம் பறிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்றார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்கா பிற நாடுகள் மீது வர்த்தக தடைகள், வரி விதித்து வரும் இதே வேளையில் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு தேவையான நிதி செலவின திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற முடியாமல் கடந்த 40 நாட்களாக முடக்கத்தை எதிர்கொண்டது அமெரிக்கா.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top