News

ரொரன்ரோவில் வாகன விபத்தில் தமிழ் பெண் ஸ்தலத்தில் பலி

 

ரொரன்ரோவில் சம்பவித்த கோர விபத்தில் தமிழ் பெண் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை ரொரன்ரோவில் ஏற்பட்ட விபத்தில் 34 வயதான சிந்துஜா ஜீவராஜ் என்ற தமிழ் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

47 வயதான ஜீவராஜ் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு உயிராபத்து இல்லையென வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

Markham Road மற்றும் Finch Avenue East ஆகிய சந்திப்புக்கு அருகிலுள்ள இரவு 7:45 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மீட்பு குழுவினர் அங்கு சென்றனர். எனினும் படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஆண் மீட்கப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தா அல்லது தற்செயலானதா என ரொரன்ரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top