News

ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமானத்திலேயே பரிதவிக்க விடப்பட்ட 150 பாலஸ்தீனர்கள்!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் 150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளனர்.

9 மாத கர்ப்பிணி பெண் உள்பட மொத்தம் 153 பாலஸ்தீனர்களை ஏற்றிச் சென்ற தனியார் (charter) விமானம் நேற்று காலை ஓ.ஆர். டாம்போ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

எனினும், அவர்கள் விமானத்திலிருந்து இறங்க அனுமதிக்கப்படாததால் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்திற்குள் தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்தவர்களிடம் இஸ்ரேல் முத்திரை கொண்ட செல்லத்தக்க பயண ஆவணங்கள் இல்லை என்றும், தென்னாப்பிரிக்காவில் அவர்கள் எங்கு தங்கவுள்ளனர் என்பதற்கான தகவலும் வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியதால் இறக்க அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

அத்தோடு, அவர்களுக்கு விமான நிலைய ஓய்வறை அல்லது பிற வசதிகளிலும் தங்க அனுமதி மறுக்கப்பட்டதால், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் நீண்ட நேரம் விமானத்திற்குள் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைக்குப் பின்னர் தென்னாப்பிரிக்கா அமைச்சர் ஒருவர் தலையீடு செய்ததன் பிறகே பயணிகள் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் ஒரு தொண்டு நிறுவனம் தங்குமிடம் வழங்க முன்வந்ததைத் தொடர்ந்து, அனைவரும் தென்னாப்பிரிக்காவில் தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்பட்டனர்.

இஸ்ரேல்–காசா போர் காரணமாக காசா மக்களுக்கு தென்னாப்பிரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாலஸ்தீனர்களை இவ்வாறு விமானத்தில் தடுத்து நிறுத்தியது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

விமானத்திலேயே பரிதவிக்க விடப்பட்ட 150 பாலஸ்தீனர்கள்! வெளிநாடொன்றில் அவலம் | Palestinians Stranded On Plane In South Africa

 

கடந்த இரண்டு வாரங்களாக இரண்டு தனி விமானங்களில் இதுபோன்ற பாலஸ்தீனர்கள் தென்னாப்பிரிக்கா வந்துள்ளதாகவும், அவர்கள் காசாவிலிருந்து வெளியேறியவர்கள் என நம்பப்படுகின்றனர்.

எனினும், இந்த விமானங்களையும் பயண ஏற்பாடுகளையும் யார் செய்தனர் என்பது இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை.

இந்த விமானம் முதலில் கென்யாவின் நைரோபியில் தரையிறங்கி பின்னர் ஜோகன்னஸ்பர்க் நோக்கி பறந்ததிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top