இந்திய – காஷ்மீரின் முக்கிய நகரமான ஸ்ரீநகர் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் 100-200 மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில் இருந்து சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்ட நிலையில் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகருக்கு தெற்கே உள்ள நவ்காம் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சில உடல்கள் “முற்றிலும் எரிந்துவிட்டதால்” அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வட்டாரம் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் வெடிகுண்டு வெடித்த நேரத்தில் வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த காவல்துறையினர், மற்றும் தடயவியல் குழு அதிகாரிகள் என அறிக்கையிடப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
