அமெரிக்காவின் வொஷிங்டன் கிரேஸ் ஹார்பர் குடியிருப்பாளர் ஒருவருக்கு இன்ஃப்ளூயன்ஸா யு ர்5 என்ற ஒரு வகை பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் தொடக்கத்தில் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனை நடவடிக்கையின் போது இது H5N5 என்ற வைரஸ் எனக் கண்டறியப்பட்டள்ளது.
இதற்கு முன்னர் இது விலங்குகளில் பதிவாகியுள்ள ஒரு பறவைக் காய்ச்சல் வைரஸ் எனவும், இதற்கு முன்பு மனிதர்களிடம் இது காணப்படவில்லை என்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரின் வீட்டின் பின்புறத்தில் கோழிகள் வளர்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது, அந்த வீட்டுக் கோழிகள் காட்டுக் கோழிகளுடன் இணைந்து திரிவதாகவும், இந்த காட்டு பறவைகளால் குறித்த வைரஸ் பரவியிருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் மற்ற பறவை இனங்களையும், எப்போதாவது பாலூட்டிகளையும் பாதிக்கலாம், மேலும் கோழிகள் மற்றும் வான்கோழிகள் போன்ற வீட்டுப் பறவைகளுக்கும் ஆபத்தானவை என மருத்துவர் தெரிவிக்கின்றனர்.
மேலும், அரிதான சந்தர்ப்பங்களில், பறவைக் காய்ச்சல் வைரஸ் மக்களைப் பாதித்து அவர்களை நோய்வாய்ப்படுத்தலாம். நோய்வாய்ப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொண்டவர்களிடமே நோய் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.இதுவரை ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட பறவைகள், கால்நடைகள் அல்லது பிற தொற்று ஏற்படக்கூடிய வீட்டு அல்லது காட்டு விலங்குகளுடன் பணிபுரியும் அல்லது
இடம்பெயர்வுப் பறவைகள் வைரஸைச் சுமந்து, வணிகக் கோழிப் பண்ணைகள் மற்றும் கொல்லைப்புற மந்தைகள் உள்ளிட்ட வீட்டு விலங்குகளுக்குப் பரப்பக்கூடும் என்பதால், இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் பறவைக் காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது, மனிதர்களிடையே பறவைக் காய்ச்சல் பரவுவது மிகவும் அரிதானது எனவும் அமெரிக்காவில் இதுவரை மனிதர்களிடையே பறவைக் காய்ச்சல் ஆவணப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மனிதனுக்கு மனிதன் பரவுவதைத் தடுக்க, பொது சுகாதார அதிகாரிகள் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எவரையும் தொடர்பு கொண்டு அறிகுறிகளைக் கண்காணித்து, தேவைக்கேற்ப பரிசோதனை மற்றும் சிகிச்சையை வழங்க முடியும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கையுறைகள், முகமூடிகள், கண் பாதுகாப்பு மற்றும் பிற வெளிப்புற ஆடைகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிவது உட்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
