வடக்குக்கான முதலமைச்சராக வேறு கட்சியின் ஊடாக நீதிபதி இளஞ்செழியன் களமிறக்கப்படுவராக இருந்தால் அவருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் போட்டி ஏற்படும் என மூத்த ஊடகவியலாளர் பிரேம் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சி ஆரம்பித்திலேயே தனது கட்சிக்கு அர்ப்பணிப்புடனும் மற்றும் கட்சிக்காக செயற்படும் ஒருவரையும்தான் வேட்பாளாராக நிறுத்துவோம் என்பதில் உறுதியாகவுள்ளது.
இதனடிப்படையில், தமிழரசுக் கட்சி நீதிபதி இளஞ்செழியனை முதலமைச்சராக களமிறக்காது.
அவ்வாறு நீதிபதி இளஞ்செழியன், வேட்பாளராக களமிறங்குவாராக இருந்தால் அது வேறு கட்சிகளினுடாக அமையலாம் என்பதுடன் அவ்வாறு அவர் வேறு கட்சியினூடாக களமிறங்கினால் கட்டாயம் தமிழரசுக் கட்சிக்கும் அவருக்கும் இடையில் போட்டி தன்மையொன்று உருவாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
