News

டிரம்ப் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல்

 

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக போர் தாக்குதல் நடந்தது. இதில் 65 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காசா அமைதி திட்டத்தை முன்வைத்தார். இதுதொடர்பக எகிப்தில் நடந்த மாநாட்டில் டிரம்ப் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து போர் முடிவுக்கு வந்த நிலையில் பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைப்படுத்த அமெரிக்கா சார்பில் அமைதி வாரியம் அமைக்கப்பட்டது. மேலும் காசா அமைதி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து அமைதி வாரியம் அமைத்து காசாவில் அமைதிப்படை வீரர்களை நிலைநிறுத்துவதற்காக வரைவு தீர்மானம் ஒன்றை டிரம்ப் முன்னெடுத்தார். இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவருக்கு ஆதரவாக 15 நிரந்தர உறுப்பினர் நாடுகளில் 13 நாடுகள் வாக்களித்தனர். ரஷியாவும், சீனாவும் ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. இதனை தொடர்ந்து காசா அமைதி திட்டத்தின் வரைவு தீர்மானத்திற்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல் அளித்தது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top