Canada

பிராம்டனில் இடம்பெற்ற தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்

கனடாவின் (Canada) பிராம்டனில் இடம்பெற்ற தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் கருவில் இருந்து குழந்தை இறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் இந்திய பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர்கள்

மக்லஃப்ளின் மற்றும் ரிமெம்ப்ரன்ஸ் சாலைகளுக்கு அருகிலுள்ள இந்த வீட்டில் மொத்தமாக 12 பேர் வசித்ததாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து - கருவிலுள்ள குழந்தை உட்பட 5 பேர் | 5 Death Including An Unborn Baby In Canada Fire

இதில் 10 பேர் பல தலைமுறை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கீழ்தளத்தில் வசித்த இரண்டு வாடகையாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

தீ விபத்தில் இருந்து நான்கு பேர் உயிர் பிழைத்ததாகவும், இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்ததாகவும் பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூன்று பேர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளனர், நான்காவது நபர் இன்னும் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக காவல்துறையினர்  குறிப்பிட்டுள்ளனர்.

தீ விபத்தில் “வீட்டில் இருந்த அனைத்தும் – தனிப்பட்ட உடமைகள், உடைகள், பாஸ்போர்ட்டுகள், காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஆவணங்கள்” எரிந்து நாசமானதாக விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top