திருகோணமலையில் உள்ள மாவீர குடும்பங்களை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு மூதூரில் (24)இடம் பெற்றது.
மாவீரர் தினத்தை முன்னிட்டு சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டில் மாவீரர் குடும்பங்களுக்காக உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
இதனை குளோபல் நிறுவனத்தின் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆயுட் கால உறுப்பினருமான குமார் ஜெயக்குமார் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
யுத்த காலத்தின் போது வீரச்சாவடைந்த மாவீரர்களின் பெற்றோர்கள் பொருளாதார கஷ்டங்களை எதிர் நோக்கியுள்ளனர் இந்த நிலையில் தனது தனிப்பட்ட நிதி பங்களிப்பில் குமார் ஜெயக்குமார் இந்த உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார்.
மூதூர் பகுதியின் சம்பூர் வீரமா நகர் நல்லூர் மற்றும் குச்சவெளி சலப்பையாறு உள்ளிட்ட பல பகுதிகளிலும் சுமார் 60 க்கும் மேற்பட்ட பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மாவீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வாக இது காணப்படுவதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.
