News

வலுக்கும் வர்த்தக போருக்கு இடையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் மார்க் கார்னி

கனேடிய பிரதமர் மார்க் கார்னி மீண்டும் அமெரிக்கா விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஜீ20 மாநாட்டின் நிறைவின் செய்தியாளர் சந்திப்பில், ட்ரம்புடன் அண்மையில் தொடர்பு கொண்டீர்களா என ஊடகவியலாளர்கள் கார்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கான அவசியம் என்ன என கார்னி பதில் கேள்வி எழுப்பியுள்ளதுடன் தேவையான நேரத்தில் மீண்டும் பேசுவேன் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இப்போது அவசரமாக பேச வேண்டிய விஷயம் இல்லை.அமெரிக்கா வணிக விவாதங்களுக்கு திரும்ப விரும்பும்போது நாம் பேசுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

நீடித்து வரும் கனடா-அமெரிக்க வர்த்தகப் போரின் மத்தியில் கார்னி விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

தென் ஆபிரிக்காவில் கார்னில் வேலையிழப்பு தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top