News

அவுஸ்திரெலியா மாவீரர் நாளில் தமிழ் தேசியக்கொடி ட்ரோன்!

தமிழீழ போராட்டத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் அவுஸ்திரெலியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நினைவெழுச்சி நாளான இன்று (27.11.2025) பசுபிக்பிராந்தியத்திய நாடுகள் முதல் அத்திலாந்திக் பிராந்திய நாடுகள் வரை நினைவு கூரப்பட்டுவரும் நிலையில் உலக நேர வலையத்தின் அடிப்படையில் வழமைபோலலே தாயக நிகழவுகளுக்கு முன்னரே முதலாவது நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆரம்பித்திருந்தன.

அவுஸ்திரேலியாவில் திறந்தவெளியில் உருவாக்கப்பட்ட கல்லறை தோட்டத்தில் குறித்த நினைவேந்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் ட்ரோன் வான் கலம் ஒன்று தமிழீழ தேசியக்கொடியை தாங்கியபடி வானில் பறந்ததை அவதானிக்ககூடியதாக இருந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் மாவீரர் தினம் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.மெல்போர்னின் பர்வுட் ரிசர்வ் நகரில் இன்று (27.11.2025) குறித்த தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

 

 

மாவீரர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top