மட்டக்களப்பு மாவட்டத்தின் தாண்டியடி துயிலுமில்லத்தில் மாவீரர் நிகழ்வு இன்று (27.11.2025) சிறப்புற இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மக்கள் பேரெழுச்சியாக திரண்டு வந்து கண்ணீருடன் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நினைவேந்தலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஞானமுத்து ஸ்ரீநேசன், வவுனதீவு பிரதேச சபை தவிசாளர் கோபாலப்பிள்ளை, மண்முனை மேற்கு உப தவிசாளர் டிசான், முன்னாள் மட்ட மாநகர முதல்வர் சரவணபவான் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
