தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவீரர் தின நிகழ்வு வியாழக்கிழமை (நவ.27) இடம்பெற்றிருந்தது.
வவுனியா தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், பிரதான திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததுடன், மலர் அஞ்சலியும் இடம்பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் பிரதான திருவுருவ படங்களுக்கு தீபமேற்றியும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
