தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் முல்லைத்தீவு ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டை துயிலுமில்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் இரண்டு மாவீரர்களின் இரு தாயார்களான காவியநாயகி ஜெயஅலெக்ஸ் மற்றும் திருநாவுக்கரசு சரோஜினிதேவி ஆகியோர் இணைந்து பொதுச்சுடரினை ஏற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.
