கனமழை காராணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது.
நாடு முழுவதும் பெய்துவரும் கன மழையால் முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் ஆலய செயற்பாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதுமாக நான்காவது நாட்களை கடந்தும் மின்சாரம், தொலைபேசிகளுக்கான இணைப்பு சில பிரதேசங்களில் வழங்கப்படாதுள்ளதுடன் , வழங்கப்பட்ட பிரதேசங்களிலும் ஒழுங்கான முறையில் இதுவரை சீர்செய்யப்படவில்லை.
அத்திய அவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது இருளில் மூழ்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
