News

இலங்கைக்கு பெருந்தொகை நிவாரண நிதியாக அறிவித்துள்ள பிரித்தானியா

பேரிடருக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு 675,000 பவுண்ட் நிதி உதவி வழங்கவுள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

டித்வா சூறாவளியிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவுவதற்காக, அவசர மனிதாபிமான உதவியாக இந்த தொகையை அறிவித்துள்ளது.

செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மற்றும் உள்ளூர் குழுக்கள் மூலம் இந்த உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசரகாலப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் பராமரிப்பை வழங்க உதவும் வகையில் இந்த வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா 2 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் சீனா 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top