News

பிளவடைந்த வட்டுவாகல் பாலம்: முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!

பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் குறித்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்ந்து வருகின்றது.

இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

எனவே தேவையின் நிமித்தம் முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top