News

இலங்கையை தலைகீழாக மாற்றியுள்ள பேரிடர் – உலக நாடுகளை நம்பியுள்ள அநுர அரசு

பேரிடரினால் உருக்குலைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இலங்கைக்கு 31 பில்லியன் ரூபாய் தேவை என்று வெளிவிவகாரங்களுக்கான அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை நிர்மூலமாக்கியுள்ள பாரிய பேரழிவை நாடு எதிர்கொண்டுள்ளது.

இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழ சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

கனமழையால் அழிக்கப்பட்ட நெல் வயல்கள் மற்றும் காய்கறி தோட்டங்களை மீட்டெடுக்க அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் கோரியுள்ளது.

சுமார் 510,000 ஹெக்டேர் பயிரிடப்பட்ட நெற்செய்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த நிலங்களை மீண்டும் பயிரிட சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து அரசாங்கம் உரத்தைக் கோரியுள்ளது.

இதேவேளை, முதற்கட்ட நிவாரண உதவிக்காக பல நாடுகள் நிதியுதவி மற்றும் பொருள் உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top