Canada

கனடா: உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க 1.2 பில்லியன் டொலர் திட்டம்

கனடா, உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க 1.2 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளது.

கனடா அரசு, உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களை தனது பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அழைத்து வர 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 1.7 பில்லியன் கனடிய டொலர்) முதலீடு செய்யும் மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது.

Canada Global Impact+ Research Talent Initiative எனப்படும் இந்த திட்டத்தின் மூலம், 1,000-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை கனடாவிற்கு அழைத்து வர முடிவு செய்துள்ளது.

Impact+ Research Chairs: 12 ஆண்டுகளில் 1 பில்லியன் டொலர் செலவில், 100 உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அவர்களின் குழுக்களை கனடாவுக்கு அழைத்து வருதல்.

Emerging Leaders Program: 120 மில்லியன் டொலர் செலவில், இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தல்.

Research Infrastructure Fund: 400 மில்லியன் டொலர் செலவில், புதிய ஆராய்ச்சி உபகரணங்கள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துதல்.

Research Training Awards: 133.6 மில்லியன் டொலர் செலவில், 600 முனைவர் பட்ட மாணவர்கள் மற்றும் 400 பிந்தைய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவித்தொகை வழங்குதல்.

அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆதரவு குறைந்து வரும் சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் கனடா இத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.

கனடாவின் தொழில்துறை அமைச்சர் மெலானி ஜோலி, “மற்ற நாடுகள் கல்வி சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நிலையில், கனடா அறிவியலுக்கு முதலீடு செய்கிறது. உலகின் சிறந்த அறிவாளிகளை ஈர்த்து, G7 நாடுகளில் முன்னணி அறிவியல் சக்தியாக மாறுவதே எங்கள் இலக்கு” என தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் H-1B விசா கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு, கனடா விரைவான குடியுரிமை பாதையை வழங்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, கனடாவை உலக அறிவியல் மற்றும் புதுமை மையமாக மாற்றும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top