News

வங்கதேச போராட்ட குழு தலைவர் மரணம்; டாக்காவில் மீண்டும் வெடித்தது வன்முறை

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய எதிர்கட்சி தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் குதித்ததால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

கடந்த ஆண்டு வங்க தேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை மாணவர்கள் தலைமையிலான எழுச்சி குழு கவிழ்த்தது. இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் 32 வயதான ஷெரிப் உஸ்மான் ஹாடி. இதன் பிறகு வங்க தேசத்தில் முக்கிய தலைவராக உருவானார். தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்காலஅரசு நாட்டை நிர்வகித்து வருகிறது.

வங்க தேசத்தில் வரும் பிப்ரவரி மாதத்தில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இன்கிலாப் மஞ்ச் என்ற அமைப்பு ஷெரிப் உஸ்மான் ஹாடி போட்டியிட முடிவு செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தேர்தல் பிரசாத்தின் ஒரு பகுதியாக மசூதி ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது மர்ம நபர்களால் சுடப்பட்டார். டாக்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் இன்கிலாப் மஞ்ச் சமூக ஊடகங்களில் ஹாடியின் மரணத்தை அறிவித்து உள்ளது. இதை அடுத்து ஒரு நாள் அரசு துக்கத்தை வங்கதேச அரசு அறிவித்துள்ளது. ஹாடி மீது துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியவர்களை பிடிக்க வங்கதேச போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் துவங்கி உள்ளனர். இரண்டு முக்கிய சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள போலீசார், அவர்களைக் கைது செய்ய தகவல் தருபவர்களுக்கு ஐந்து மில்லியன் டாக்கா வெகுமதியையும் அறிவித்துள்ளனர்.

ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ளது. தலைநகர் டாக்கா உள்ளிட்ட இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, செய்தி பத்திரிகை அலுவலகங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, போராட்டக்காரர்கள் அமைதி காக்கும்படி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கோரிக்கை விடுத்துள்ளார். உஸ்மான் ஹாடியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top