தைவானின் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனால், பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல், பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றுக்கு மத்தியில் இருக்கும் தீவு தான் தைவான். பல ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. தைவான் தனி நாடு அல்ல, அது சீனாவின் ஒரு பகுதி என்று தொடர்ந்து சீனா சொல்லி வருகிறது. அதேநேரம், எங்களுக்கென்று தனி இறையாண்மை உள்ளது. நாங்கள் தனி நாடு தான் என்கிறது தைவான்.
இது குறித்து தைவான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘இன்று காலை 6 மணி வரை தைவானைச் சுற்றி சீனாவின் 7 விமானங்களும், 11 கடற்படைக் கப்பல்களும் ரோந்து வந்ததை உறுதி செய்தோம். எங்களின் ஆயுதப் படைகள் நிலவரத்தைக் கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுத்தன,’ எனக் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் இந்த செயலால் கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதட்டம் நிலவி வருகிறது.
