News

கிரீன் கார்ட் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்திய ட்ரம்ப்

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன் கார்ட் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவின் Brown பல்கலைக்கழகம் மற்றும் MIT ஆகியவற்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபர், இந்த விசா குலுக்கல் முறையிலேயே 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்தது கண்டறியப்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

48 வயதான போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர், கிரீன் கார்ட் பெற்று சட்டபூர்வமாக தங்கியிருந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம், ஜனாதிபதி ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top