தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் சிரேஷ்ட இராணுவ ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளளனர்.
தெற்கு மாஸ்கோவில் நடந்த இக்கார் குண்டுவெடிப்பில் பொது ஊழியர்கள் பயிற்சித் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவின் கொல்லப்பட்டுள்ளார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில், சர்வரோவின் காரின் அடியில் ஒரு வெடிபொருள் வெடித்துள்ளது. அதனால் கடுங்காயங்களுக்கு உள்ளான ஜெனரல் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார் என்றுள்ளனர்.
அத்தோடு இக்குண்டு வெடிப்பில் உக்ரேனிய சிறப்புப் படைகளின் சாத்தியமான ஈடுபாடு குறித்து விசாரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், உக்ரைன் உளவுத்துறை அமைப்புகளின் உதவியுடன் இக்குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு உக்ரைன் தரப்பில் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
