சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள பாரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் பிரபலமான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாடி மகிழ, 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அந்நாட்டு நேரப்படி, அதிகாலை 1.30 மணிக்கு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் வெளிநாட்டினரும் அடக்கம்.
புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடித்த போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது பயங்கரவாத தாக்குதல் இல்லை எனவும் அறிவித்துள்ளனர்.
அவசர உதவிக்கு +41 848 112 117 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
