ரஷ்யாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உக்ரைன் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அமெரிக்கா பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் கெர்சான் பிராந்தியத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது உக்ரைன் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கெர்சான் பகுத கவர்னர் விளாடிமிர் சால்டோ கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நமது எதிரிகள் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தினர். கருங்கடல் அருகேயுள்ள கோர்லி பகுதியில் இருந்த ஓட்டல் மற்றும் விடுதியில் இந்த தாக்குதல் நடத்தியது. முதற்கட்டமாக இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதும், 50 பேர் காயமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரஷ்யா வான் பாதுகாப்பு அமைப்பு உக்ரைன் அனுப்பிய 168 டிரான்களை தாக்கி அழித்தது. இவ்வாறு அவர் கூறினார்.
