News

தெற்கு, மத்திய சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 18 பேர் உயிரிழப்பு

தெற்கு மற்றும் மத்திய சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 18 பேர் உயிரிழந்தனர். காட்டுத்தீயால் 18 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, வீடுகளை விட்டு 50,000 பேர் வெளியேறியுள்ளனர். அதிக வெப்பம் மற்றும் பலத்த காற்றினால் தீவிரமடைந்த இந்தத் தீ, தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள உபிள், பயோபியா பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. காட்டுத்தீ பரவி வரும் 2 மாகாணங்களில் அவசர நிலையை சிலி நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இத்தகைய தீ, கடலோர நகரமான கன்செப்சியனுக்கு அருகிலுள்ள வறண்ட காடுகள் வழியாகப் பரவி, சுமார் 250 வீடுகளை அழித்துள்ளது. சிலி வனத்துறையினர், நாடு முழுவதும் 24 இடங்களில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருவதாகவும், இதில் நியூப்ளே மற்றும் பயோபியோ பிராந்தியங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 8,500 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது, மேலும் பலரை வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பலத்த காற்று மற்றும் அதிக வெப்பநிலை உள்ளிட்ட பாதகமான சூழ்நிலைகள், தீயணைப்பு முயற்சிகளைச் சிக்கலாக்கியுள்ளன மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top