ஜப்பான் சுமார் 15 ஆண்டுகளின் பின்னர் உலகின் மிகப்பெரிய அணு உலையான புக்குஷிமா மின் உற்பத்தி நிலையத்தை மீட்டு இயக்க ஆரம்பித்துள்ளது.
டோக்கியோவின் வட மேற்கே அமைந்திருக்கும் கஷிவசாக்கி கரிவா ஆலையின் 6 ஆம் இலக்க உலை நேற்று இயக்கப்பட்டது. இதன் எச்சரிக்கும் முறை செயலிழந்ததால் ஒரு தினம் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டதோடு இதன் வர்த்தக செயற்பாடுகள் அடுத்து மாதத்தில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் அணுசக்தி மீண்டும் ஆரம்பிக்கப்படுவதன் அண்மைய முயற்சியாகவே இது உள்ளது. எனினும் இந்த செயற்பாட்டுக்கு இன்னும் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்று நம்பப்படுகிறது. இதன் 7 ஆவது உலை 2030 வரை செயற்பாட்டுக்கு திரும்பாது என நம்பப்படுகிறது.
ஜப்பானில் 2011 இல் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து புக்குஷிமா மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டது.
