அமெரிக்கா இருப்பதால் தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கனடா நாட்டை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணைக்கவேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதனிடையே கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் ஒரு AI படத்தையும் பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிற நாடுகளை அச்சுறுத்த பொருளாதார பலம் தற்போது ஆயுதமாக மாறியுள்ளதாக அமெரிக்காவை கனடா பிரதமர் சாடியிருந்தார்.
இந்தநிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஏராளமான இலவச சலுகைகளை பெறும் கனடாவுக்கு நன்றியுணர்வு இல்லை என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
