மத்திய மெக்சிகோவில் உள்ள மோரெலோஸ் மாநிலத்தின் ஒரு கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று இரவு அந்த மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது, ஆயுதம் ஏந்திய சில மர்ம நபர்கள் திடீரென மைதானத்திற்குள் புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணி குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, மெக்சிகோவில் செயல்பட்டு வரும் இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அப்பகுதியை காவல்துறையினர் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
