News

ஈழப்போரின் இறுதிக்கனங்களை புகைப்பட ஆவணமாக்கிய சுரேன் கார்த்திகேசுவின் உயிர்காக்கும் கோரிக்கை

இறுதி யுத்த காலத்தில் களத்தில் நின்று பல சம்பவங்களை நேரடியாகப் படம்பிடித்தவர்களில் ஒருவரான ஈழத்தமிழர் சுரேன் கார்த்திகேசு, இன்று இணையங்களில் நாம் பார்க்கும் இறுதி யுத்த காட்சிகள் பலவற்றுக்கு சொந்தக்காரர் ஆவார்.

இனஅழிப்புப் போரின் கொடூர விளைவுகளால் கனடாவில் அவதியுறும் இவர், மக்களிடம் மனிதாபிமான அடிப்படையில் உதவி கோரி உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தாக்குதல்களில் அடுத்தடுத்து படுகாயமடைந்த அவர், கடந்த 16 ஆண்டுகளாக அதன் உடல்-மன பாதிப்புகளுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பல சிரமங்களுக்கிடையிலும் அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது.

இரண்டு சிறுநீரகங்களும் முற்றாக செயலிழந்துள்ளதால், உடனடியாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அவசியமாகியுள்ளது.

இந்த நிலையில், சட்டரீதியான காரணங்களால் நாட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத சூழலில், கனடாவில் வசிக்கும் B அல்லது O வகை குருதியைக் கொண்ட எவரேனும் ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கினால், தனது உயிரை காப்பாற்ற முடியும் என அவர் கூறியுள்ளார்.

இதன்படி, மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவ விரும்புபவர்கள் கீழ்கண்ட விவரங்கள் மூலம் அவரை தொடர்புகொள்ளலாம்.

சுரேன் கார்த்திகேசு மின்னஞ்சல்: [email protected] தொலைபேசி: +1 778 708 8893

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top