News

கொலம்பியாவில் விமான விபத்து: அரசியல்வாதி உட்பட 15 பேர் உயிரிழப்பு!

 

கொலம்பியாவில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 15 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரச விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

விமான நிறுவனம் வெளியிட்ட பயணிகள் பட்டியலின்படி, குறித்த விமானம் அரசியல்வாதி டியோஜெனெஸ் குயின்டெரோ மற்றும் அவரது குழுவினர் பலரை ஏற்றிச் சென்றதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட கொலம்பிய தேர்தலில் போட்டியிட அவர் தயாராகி வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டு நேரப்படி காலை 11:42 மணிக்கு, குறித்த விமானம், குகுடா விமான நிலையத்திலிருந்து  புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குகுடாவிலிருந்து ஒகானாவுக்குப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்ததாக அந்த நாட்டு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்துக்குள்ளான இடத்திற்கு அந்த நாட்டு மீட்புக் குழுக்கள் சென்ற நிலையில், யாரும் உயிர் பிழைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top