News

ராஜபக்சர்களுக்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை முடக்கிய அநுர அரசு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட  சிரிலிய கணக்கு விண்ணப்பப் படிவம் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வங்கி கணக்கை ஆரம்பிக்கும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய விண்ணப்பப் படிவம் தற்போது வங்கியில் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், தற்போது இந்தக் கணக்கின் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதென அவர் கூறியுள்ளார்.

இந்தக் கணக்கு இடைநிறுத்தப்படும் போது அதில் 44 மில்லியன் ரூபாய் பணம் காணப்பட்டுள்ளது.

மேலும், ஆரம்பம் முதல் இந்தக் கணக்கில் மொத்தம் 82.9 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டிருந்ததாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதி விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top