Canada

கனடாவுக்கு தற்காலிக விசாவில் சென்ற தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை கடுமையாக்கப்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார்.

தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் வெளியேறுவதைக் கண்காணிக்க டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும் போது அவரது விபரங்களை எல்லைப் பாதுகாப்பு முகவரகம் பதிவு செய்யப்படுகிறது.

எனினும் விசா காலம் முடிந்ததால் குறிப்பிட்ட நபர் வெளியேறுகிறாரா என்பதைத் தானாகக் கண்டறியும் வசதி இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை சாதாரண நடைமுறையின் மூலம் சரிபார்க்க அதிக நேரம் எடுப்பதால், அதனை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் தற்காலிக விசாக்கள் காலாவதியாகவுள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

விசிட்டர் விசா உட்பட பல விசாக்களில் பல தமிழர்கள் கனடா சென்றுள்ள நிலையில், அவர்களுக்கும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top