மத்திய கிழக்கு முழுவதும் உள்ள விருந்தோம்பல் நிறுவனங்களுக்கு ஈரான் ஒரு பரந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்க இராணுவத்தினரைத் தங்கவைக்கப் பயன்படுத்தப்படும் ஹோட்டல்கள் மற்றும் பிற பொதுமக்கள் தங்கும் வசதிகள், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் “சட்டபூர்வமான தற்காப்பு இலக்குகளாக கருதப்படலாம் என்று ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம், தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அமெரிக்கப் படையினர் பயன்படுத்தும் இடங்கள் பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை என்று கூறியுள்ளது.
சிரியா, லெபனான் மற்றும் ஜிபூட்டி உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற பகுதிகளிலும் வெளிநாட்டுப் படைகளுக்கான மாற்றுத் தங்குமிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அது குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கு நெருக்கமான குறித்த செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய தகவல்களின்படி, ஹோட்டல் நடத்துனர்களுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை விரிவானது மற்றும் திட்டவட்டமானது ஆகும்.
கூறப்படும் அந்தச் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், வெளிநாட்டு இராணுவத்தினரைத் தங்கவைக்கும் எந்தவொரு இடமும் அதன் புவியியல் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு முறையான இலக்காகக் கருதப்படும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
வியாழக்கிழமை முன்னதாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) சேர்ந்த பாரசீக வளைகுடா அரபு நாடுகளில் உள்ள இராணுவத் தளங்களில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி, ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்களில் தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே, அமெரிக்க வீரர்கள் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் (GCC) உள்ள இராணுவத் தளங்களிலிருந்து தப்பித்து, ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்களில் ஒளிந்துகொண்டனர், என்று கூறியு அரக்சி, அமெரிக்கப் படைகள் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் குடிமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
