News

டிரோன் தாக்குதல்.. அபுதாபி அணுமின் நிலையத்தில் தீ விபத்து

 

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அல்-தப்ரா பகுதியில் பரக்கா அணுமின் நிலையம் அமைந்துள்ளது.

இந்த அணுமின் நிலையத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மின் உற்பத்தி ஜெனரேட்டர் சேதமடைந்து தீப்பற்றியுள்ளது. தீ, நிலையத்தின் பிற பகுதிகளுக்கும் பரவிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அபுதாபி ஊடக அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இந்த விபத்தினால் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எவ்வித பாதிப்போ அல்லது அச்சுறுத்தலோ ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top