இலங்கையின் கொழும்பு அருகே கழுதாரா மாவட்டத்தின் அங்குவார்வொட்டா பகுதியில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இங்கு நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் தீ மிக வேகமாகப் பரவியதன் காரணமாக, அங்கிருந்த முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போனது.
சம்பவ இடத்திலேயே 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீட்பு படையினர் விரைந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி தீப்பிடித்த கட்டிடத்திற்குள் இருந்து மொத்தம் 51 பேர் பத்திரமாக மீட்டனர்.
அவர்களில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்ததினர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயந்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கு முதன்மைக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த சுமார் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்து நடந்த நேரத்தில் முதியோர் இல்லத்தில் சுமார் 72 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. தனியாரால் நடத்தப்படும் இந்த இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களும் தங்க வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.