News

செம்மணியில் மூன்று சிறுவர்களுடைய என்பு கூடு உட்பட 11 தொகுதிகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன், 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Gallery

அதன் போது 13 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் சிறுவர்களுடைய மூன்று என்பு கூட்டு தொகுதி உட்பட 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, 296 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 290 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Gallery

அதேவேளை இன்றைய அகழ்வு பணிகளின் போது, என்பு கூடொன்றுடன் தகர வடிவிலான பொருள் ஒன்று மீட்கப்பட்டு அது சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அகழ்வு பணிகள் இடம்பெறாது எனவும், நாளை அகழ்வு பணிகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top