News

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து : 10 பேர் பலி, 64 பேர் காயம்

 

 

மத்திய மெக்சிக்கோவின் டெமாஸ்கல்சிங்கோ நகரில் நடைபெற்ற மதச் சடங்கின் போது பட்டாசு தயாரிப்புப் பொருட்கள் வெடித்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 64 பேர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (5) இரவு நடைபெற்ற பாரம்பரிய பட்டாசு காட்சியின்போது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 66,000 மக்கள் வசிக்கும் டெமாஸ்கல்சிங்கோ நகரில் உள்ள Nuestra Señora de la Luz தேவாலயத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதச் சடங்கிற்காக நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் கூடியிருந்த நிலையில், ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பினால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததுடன், புகை மற்றும் கட்டிட இடிபாடுகள் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியுள்ளன.

இதையடுத்து அவசரகால மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டதுடன், சம்பவ இடத்தில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர்.

வெடிப்புக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவத்தினால் ஏற்பட்ட சேதங்களின் அளவையும் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

காயமடைந்தவர்களின் உடல்நிலை தொடர்பிலும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்பது தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top