News

யாழில் இரண்டாவது நாளாக அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு தினம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டின் நினைவு தினம் இரண்டாம் நாளாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று(16.09.2026) காலை 9 மணியளவில் நடைபெற்றுள்ளது.

பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூவியில் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வு, அக வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் நிரஞ்சன் ஈகைச் சுடரினை ஏற்றிவைக்க, பருத்தித்துறை நகர பிதா வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமூக பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டுள்ளதுடன், மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top