News

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

 

இந்தோனேஷியாவின் – சும்பாவா தீவுப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கம் இன்று (04) 5.9 ரிக்டர் அளவில் பூமியிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் (6.21 மைல்கள்) ஆழத்தில் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து உடனடி உயிரிழப்புகளோ அல்லது பாரிய சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா பசுபிக் ‘நெருப்பு வளையத்தில்’ அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி இவ்வாறான நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top