News

“எந்நேரமும் எதுவும் நடக்கலாம்” – தென்னாப்பிரிக்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

 

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோஹன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய பொருளாதார நகரமாக திகழும் சாண்ட்டன் நகரில் இந்த வார இறுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உயர்தர கடைகள் மற்றும் வானளாவிய வணிக அலுவலக கட்டடங்கள் மற்றும் முக்கிய வங்கிகள் அதிகம் இருக்கும் நகரம் சாண்ட்டன் ஆகும். இங்கு மக்கள் அதிகம் கூடும் இடத்தைக் குறிவைத்து சனிக்கிழமை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அரசுக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க இராணுவம் அண்டை நாடான மொசாம்பிக்கில் இஸ்லாமிய கிளர்ச்சிக்கு எதிராக போராட உதவி வரும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top