News

தலிபான்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பிரித்தானியர்கள்

ஆப்கானிஸ்தானில் பிரித்தானியாவை சேர்ந்த 3 பேர் தலிபான்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களுடன் தூதரகத் தொடர்பை பெற முயற்சித்து வருவதாக பிரித்தானியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச நாடுகளில் இருந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரித்தானியாவை நாட்டைச் சேர்ந்த 3 பேரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் பிரித்தானியர்கள் தலிபான்களால் எவ்வாறு கைது செய்யப்பட்டார்கள் என்ற விபரம் வெளியாகவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top