ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடுகடத்துவதை அதிகரிக்க ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
ஜேர்மன் உள்துறை அமைச்சகம், தாலிபான் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடுகடத்துவதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக, மாதம் ஒன்றிற்கு மூன்று விமானங்களை ஏற்பாடு செய்ய ஜேர்மனி திட்டமிட்டுவருவதாக ஜேர்மன் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், தீவிர குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதப்படும், ஏற்கனவே சிறையிலிருக்கும் நபர்களை, கிட்டத்தட்ட வாரம் ஒரு முறை நாடுகடத்தவும் திட்டமிடப்பட்டுவருகிறது.
ஜேர்மன் மாகாணங்கள் யார் யாரை நாடுகடத்துவது என்பதை முடிவு செய்ய, ஃபெடரல் பொலிசார் நாடுகடத்தலை மேற்பார்வையிட உள்ளார்கள்.
இந்நிலையில், இப்போதைக்கு உடனடியாக சுமார் 100 குற்றவாளிகள் நாடுகடத்தப்பட தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
