News

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமளிக்கமாட்டேன்: சதி முயற்சியைத் தோற்கடிப்பேன்! ரணில் சூளுரை

“சதியூடாக எனது ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். அந்த முயற்சியை முழுமையாகத் தோற்கடிப்பேன்”  என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சூளுரைத்துள்ளார்.

சதி முயற்சி தொடர்பான உளவுத் தகவல்களையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி ரணில் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. உளவுத் தகவல்களுக்கு அமைவாக அவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சதி நடவடிக்கை ஊடாக ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் அது நிச்சயமாகத் தோல்வியில்தான் முடியும்”  என்றார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top