Canada

கனடாவில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு ஆபத்து – பலர் நாடு கடத்தப்படும் அபாயம்

கனடாவில் முதன்முறையாக தற்காலிக விசாவில் தங்கியிருப்போர் தொடர்பான தகவல்களை துல்லியமாக கண்டறியும் கணக்கெடுப்பை மார்க் கார்னி அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

இதன் காரணமாக விசிட்டர் விசா மற்றும் தற்காலிக விசாவில் சென்ற தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

கனடாவில் சட்ட பூர்வ அனுமதியின்றி அல்லது விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியுள்ளவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

நாட்டில் சட்டவிரோதமான முறையில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கலாம் என குடிவரவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச மாணவர்கள், விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருப்பவர்கள் மற்றும் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் என பெருமளவிலானோர் சட்ட பூர்வ ஆவணங்களின்றி நாட்டுக்குள் வசிப்பதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிதாக வெளியான அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் கல்வி விசா காலம் முடிந்த 39,500 பேரில், சுமார் 23,500 பேர் கனடாவை விட்டு வெளியேறியதை கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் அமைப்பினால் உறுதிப்படுத்த முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top