இலங்கை தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில்
கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்றையதினம் (18.05.2023) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு போதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டு பின் மெழுகுவர்த்தி ஏந்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்தநிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உட்பட கட்சி உறுப்பினர் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18.05.2023) கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து உயிரிழந்தவர்கள் நினைவாக மத பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் அனுஷ்டிப்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சைவ, கிறிஸ்தவ மதகுருமார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18.05.2023) கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளதுடன் சைவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த மத வழிபாடுகளும் இடம்பெற்றன.
மக்கள் ஈகைச்சுடர்களை ஏற்றி உயிரிழந்த அனைவருக்குமாக கண்ணீருடன் மலர் அஞ்சலி செலுத்தினர்.
கிளிநொச்சி சமத்துவக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
முன்னாள் அரசியல் துறை போராளியும், சமத்துவக் கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான வேங்கை தலைமயில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து மலர் அஞ்சலியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆரம்பித்து வைக்க ஏனையவர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.