News

முள்ளிவாய்க்காலில் பாலச்சந்திரனின் நினைவுகளை மீட்ட சிறுவன்..!

இலங்கையில் யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில், பல உயிர்களின் இரத்த கரைகள் படிந்த முள்ளிவாய்க்கால் மண்ணில், தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

இதனால் இன்றைய தினம் தமிழ் மக்களின் கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால்.

இதேவேளை, இறந்த உறவுகளின் நினைவில் கரைந்த மக்களை இன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாலச்சந்திரன் இறந்து கிடந்த காட்சியும் அவரின் அப்பாவிதனமான இறுதி தருணங்களும் என்றும் தமிழரின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

இவ்வாறு இருக்கையில், முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் பாலசந்திரனின் இறுதி தருணங்களை ஒரு சிறுவன் மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளார்.

குறித்த சிறுவன் பாலச்சந்திரனை போன்று உடையணிந்து, அவர் இறுதியாக அமர்ந்திருந்ததை போன்று ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தார்.

இந்த காட்சி அப்படியே பாலச்சந்திரனை பிரதிபலிப்பதாக இருந்தமையால் அங்கிருந்த மக்கள் அனைவரும் அந்த சிறுவனை பார்த்து,மெய்சிலிர்த்து போனதுடன் பலரும் கண்ணீரை சிந்தியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top