பிரான்சில், விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளை ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சிலுள்ள பிரபல சுற்றுலாத்தலமான Annecy என்னும் ஏரியின் அருகில் அமைந்துள்ள விளையாடு மைதானம் ஒன்றில் பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
அப்போது திடீரென ஒருவர் பிள்ளைகளைக் கத்தியால் தாக்கத் துவங்கியுள்ளார்.
இந்த கோர தாக்குதலில், சுமார் 3 வயதேயாகும் எட்டுக் குழந்தைகள் படுகாயமடைந்துள்ளார்கள், மேலும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர்.
விரைந்து செயல்பட்ட பொலிசார் அந்த நபரை சுட்டுப் பிடித்துள்ளார்கள்.
பிரான்ஸ் பிரதமர் முதல் பலரும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பொலிசார் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.