தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்துள்ள நிலையில், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இருவர் பலியாகியுள்ளனர். பலர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சுமார் 7 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
