News

மாலி: ராணுவ படைத்தளத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

 

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ராணுவ ஜெனரல் அசிமி கொமிடா செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, மாலியின் தலைநகர் பமாகோ உள்பட பல்வேறு நகரங்களில் கடந்த மாதம் 27ம் தேதி அல்கொய்தா உள்பட பயங்கரவாதிகளுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். தலைநகர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்ற கிளர்ச்சியாளர்களும், பயங்கரவாதிகளும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேவேளை, இந்த தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், மாலியின் வடக்கு மாகாணம் கிடல் அருகே உள்ள டிசலிட் நகரில் அமைந்துள்ள ராணுவ படைத்தளத்தை பயங்கரவாதிகளுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மாலி ராணுவம் மற்றும் ரஷிய ஆதரவுப்படைகளும் டிசலிட் ராணுவ படைத்தளத்தில் இருந்து பின்வாங்கிவிட்டன. இதையடுத்து, அந்த படைத்தளத்தை பயங்கரவாதிகளுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top